அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஜல்லி சிதறல்; மக்கள் கதறல்: பனமரத்துப்பட்டி அருகே, களரம்பட்டியிலிருந்து, தண்ணிகாடு வழியாக, புதுமாரியம்மன் கோவில் பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை, 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அதை, களரம்பட்டி, மாக்கனூர், பாறையூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதன் மேற்புறமிருந்த சிறு ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. அவை, பாதசாரிகளின் கால்களில் குத்துகின்றன. இருசக்கர வாகனங்கள் பஞ்சராகிவிடுகின்றன. அச்சாலையை புதுப்பிக்க வேண்டும்.
பள்ளத்தால் விபத்து; சீரமைத்தால் தீர்வு: பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா அலுவலகம் முன், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம், பள்ளம் உருவாகி, மழைநீர் தேங்கி நிற்கிறது. அருகில், அரசு மருத்துவமனை, சார்பதிவாளர், ஒன்றியம் உள்பட, பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுவதால், தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதில், இருசக்கர வாகனத்தில் வருவோர், பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். அப்பகுதியை சமன்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் எதிரே, குடிநீர் குழாய், பூமிக்கு அடியில் பதிக்கப்படாமல், மேற்பரப்பில் விடப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் நான்குசக்கர வாகனங்கள், குழாய் மீது ஏறுவதால், உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வெளியேறும் குடிநீர், பழைய போலீஸ் ஸ்டேஷன் வரை வழிந்தோடுகிறது. இரவில், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், குழாயின் மீது மோதி தடுமாறி விழுகின்றனர். அதனால், குழாயை பூமிக்கடியில் பதிக்க வேண்டும்.

படுமோசமான சாலையால் அவதி: இடைப்பாடி அருகே, குள்ளம்பட்டியிலிருந்து, தண்ணீர்தாசனூர், ஒக்கிலிப்பட்டிக்கு, தார்ச்சாலை செல்கிறது. அங்கு, 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை, தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். கரையோரம் அருகே, சாலை உள்ளதால், வாகன ஓட்டிகள், ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் பலனில்லை.

ஓய்விடமான பள்ளி கட்டடம்: தலைவாசல், தியாகனூர் தெற்கில், அரசு தொடக்க பள்ளி கட்டடம் பாழடைந்த நிலையில் உள்ளது. அதனால், மாற்று கட்டடமாக, அங்குள்ள சமூக நலக்கூடத்தில் பள்ளி செயல்படுகிறது. ஆனால், பள்ளி கட்டடத்தை சீரமைக்காததால், பகுதிவாசிகள், வாகன ஓட்டிகள் ஆகியோர், அதை ஓய்விடமாக பயன்படுத்தி வருகின்றனர். சிலர், இரவில் மது அருந்துதல் உள்ளிட்ட தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். அதனால், உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X