ஒரே பஸ்சில் 100 மாணவர்கள் பயணம்: உயிர் போகும் முன் விழிப்பரா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே பஸ்சில் 100 மாணவர்கள் பயணம்: உயிர் போகும் முன் விழிப்பரா?

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

இடைப்பாடி: அரசு கல்லூரிக்கு, ஒரே பஸ்சில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் செல்கின்றனர். மேலும் பலர், லாரிகளில் செல்கின்றனர். இதனால், காலை, மாலையில், கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். இடைப்பாடி, கோணமேரிமேட்டிலுள்ள அரசு கலைக்கல்லூரியில், ஏழு பிரிவுகளில் இளநிலை, நான்கு பிரிவுகளில் முதுகலை என, 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆனால், இடைப்பாடியிலிருந்து, 5 கி.மீ., தொலைவிலுள்ள கல்லூரி வர, காலை, மாலையில், போதிய பஸ்கள் இல்லை. இதனால், மாணவ, மாணவியர், பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக, காலையில், இடைப்பாடி பஸ் ஸ்டாண்டிலிருந்து, கல்லூரி செல்ல நான்கு பஸ்கள், மாலையில், அங்கிருந்து, இடைப்பாடி வர, இரு பஸ்களை, அரசு போக்குவரத்துக்கழகம் இயக்குகிறது. அதில், ஒரே பஸ்சில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஏறி, ஒருவரை ஒருவர் உரசியபடி, இடித்தபடியே, தினமும் பயணிக்கின்றனர். அளவுக்கு அதிகமான கூட்டத்துடன் செல்வதால், மாணவர்கள், தினமும் படிக்கட்டுகளில், 'தொங்கல்' பயணமே மேற்கொள்ளும் நிலை உள்ளது. இதனால், அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மேலும் பலர், பஸ்கள் இல்லாததால், அந்த வழியே செல்லும் லாரிகள், மினி ஆட்டோக்களில் செல்கின்றனர். இன்னும் சிலர், ஒரு பைக்கில் மூவர், நால்வர் என பயணிக்கின்றனர். இதனால், அசம்பாவிதம் ஏற்படும் முன், போக்குவரத்துக்கழக நிர்வாகம், கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். இடைப்பாடி அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் சதாசிவம் கூறியதாவது: மாணவர்கள், கல்லூரி சென்றுவர வசதியாக, காலையில் நான்கு, மாலையில் இரு பஸ்களை இயக்குகிறோம். இதற்கு மேல், கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுமானால், கல்லூரி நிர்வாகம், போக்குவரத்து உயரதிகாரிகளிடம் பேசிதான், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை