தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: இந்திய அரசு மேம்பாட்டு தேசிய வளர்ச்சி நிறுவனம் அளிக்கும், குறுகிய கால தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும், 16 முதல் 23 வரை சேலம், நான்கு ரோட்டில், சாமுண்டி காம்ப்ளக்ஸில் உள்ள, ஜெம் அண்ட் ஜூவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டரில் நடக்கிறது. பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக சேரலாம். சொந்தமாக நகை அடமான கடை வைக்கலாம். கல்வி தகுதியில்லை. பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். அதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி கட்டணம், 4,500 ரூபாய், விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய். விரும்புவோர் வரும், 16 அன்று, மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது நோட்டு, பேனா மற்றும் செய்முறைக்கான டூல்கிட் இலவசமாக வழங்கப்படும். விபரம் பெற, 94437-28438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை