8 வழிச்சாலைக்கு 3 டி.ஆர்.ஓ.,க்கள் நியமனம்: கிருஷ்ணகிரியில் 1 கி.மீ., தூரம் குறைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

8 வழிச்சாலைக்கு 3 டி.ஆர்.ஓ.,க்கள் நியமனம்: கிருஷ்ணகிரியில் 1 கி.மீ., தூரம் குறைப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: எட்டு வழிச்சாலை பணியை துரிதமாக மேற்கொள்ள, ஓய்வு பெற்ற மூன்று டி.ஆர்.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சாலை தூரத்தில், கிருஷ்ணகிரியில், ஒரு கி.மீ., தூரம் குறைகிறது.
சேலம் - சென்னை இடையே, 277.3 கி.மீ., தொலைவில், எட்டு வழிச்சாலை, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது. அதில், காஞ்சிபுரத்தில், 59.1 கி.மீ., திருவண்ணாமலை, 123.9 கி.மீ., கிருஷ்ணகிரி, 2 கி.மீ., தர்மபுரி, 56 கி.மீ., சேலம், 36.3 கி.மீ., தூரத்துக்கு சாலை அமைகிறது. காஞ்சிபுரத்தில், எட்டு வழிச்சாலை பணியை மேற்கொள்ள, ஓய்வு டி.ஆர்.ஓ., நர்மதா, ஏற்கனவே பணியமர்த்தப்பட்டுள்ளார். இதர மாவட்டங்களில், தற்போதுள்ள டி.ஆர்.ஓ.,க்கள், கூடுதல் பொறுப்பாக, எட்டு வழிச்சாலைப்பணியை கவனித்தனர். தற்போது, ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ.,க்கள், சேலத்துக்கு குழந்தைவேலு, தர்மபுரிக்கு முகுந்தன், திருவண்ணாமலைக்கு வெற்றிவேலு ஆகியோர், அப்பணிக்கு, சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில், 2 கி.மீ.,க்கு பதில், ஒன்றாக குறைவதால், அதை, தர்மபுரி சிறப்பு அதிகாரி முகுந்தன் கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மூவரும், இன்று பொறுப்பேற்று, பணியை தொடர்கின்றனர். இதற்கான உத்தரவை கூடுதல் அரசு செயலர் ராஜூவ்ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை