போலீஸ் ஸ்டேஷன் எதிரில் பெண்ணை கொலை செய்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் எதிரில் பெண்ணை கொலை செய்தவர் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராணிப்பேட்டை: போலீசில் புகார் கொடுத்து விட்டு, வெளியே வந்த பெண்ணை, ஸ்டேஷன் எதிரிலேயே, அரிவாளால் வெட்டி கொலை செய்த கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே, செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுகுணா, 45. இவர் கணவர் நம்பிராசன் கடந்தாண்டு இறந்து விட்டதால், காரையை சேர்ந்த, சுரேந்திரனிடம், 48, கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். இந்நிலையில், சுகுணாவுக்கும், சுரேந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த, 11 மாலை, 4:30 மணிக்கு ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேனுக்கு சென்ற சுகுணா, சுரேந்திரன் மீது புகார் செய்தார். பின், அங்கிருந்து வெளியே வந்த அவரை, பைக்கில் வந்த ஒருவர், போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே, சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார். இதில், சுகுணா இறந்தார். இது தொடர்பாக, ராணிப்பேட்டை போலீசார், கள்ளக்காதலன் சுரேந்திரனை நேற்று கைது செய்தனர். விசாரணையில், போலீசில் தன் மீது புகார் கொடுத்ததால், கொலை செய்தது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X