லஞ்சம் வாங்கி விடுவித்த மணல் கடத்தல் டிராக்டர் மீண்டும் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கி விடுவித்த மணல் கடத்தல் டிராக்டர் மீண்டும் பறிமுதல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: செங்கம் பகுதியில், லஞ்சம் வாங்கிக் கொண்டு, மணல் கடத்தல் டிராக்டர்களை விடுவித்த நிலையில், எஸ்.பி., தலையீட்டால், இரவோடு இரவாக மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில், பாலாற்றில் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. பகல் நேரங்களில், ஆற்றில் மணல் சேகரித்து, இரவு நேரங்களில் கடத்தி செல்கின்றனர். இது குறித்து வருவாய்த்துறை, போலீசாரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், புகார் செய்தவர்களின் விபரங்களை மணல் கடத்தும் கும்பலிடம் கூறுகின்றனர். இதனால், புகார் தெரிவிப்பவர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள, ஆற்று பகுதியில் மணல் கடத்திய சிவா, 32, சீனிவாசன், 35, மதியழகன், 34, ஆகியோர், மணல் கடத்தியபோது டிராக்டருடன் பறிமுதல் செய்து, செங்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு புகார் பதிவேட்டில், வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட விபரம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, மூன்று டிராக்டரையும் விடுவித்தனர். இது தொடர்பாக எஸ்.பி., பொன்னிக்கு புகார் சென்றது. அவர் விசாரணை நடத்தியதால், விடுவிக்கப்பட்ட டிராக்டர்களை, இரவோடு இரவாக அவர்களின் வீட்டிற்கு சென்று, மீண்டும் பறிமுதல் செய்தனர். மேலும், சிவாவின் அண்ணன் ராஜாமணி, 36, டிராக்டர் டிரைவர் சீனுவாசன், 29, ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை