மயக்க திரவம் தெளித்து நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.4,100 அபேஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயக்க திரவம் தெளித்து நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.4,100 அபேஸ்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆரணி: ஆரணியில், மயக்க திரவம் தெளித்து, தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரிடம், 4,100 ரூபாய் அபேஸ் செய்தவரை, பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் பகுதியில் அமுதசுரபி கூட்டுறவு வங்கி உள்ளது. இதில் காசாளராக அதே பகுதியை சேர்ந்த அம்சவேணி, 27, பணிபுரிகிறார். இவர், நேற்று காலை, 11:00 மணிக்கு பணியில் இருந்தபோது, வாலிபர் ஒருவர் சென்று, உங்களுக்கு திருமணமாகவில்லை. அதற்கு பரிகாரம் செய்கிறேன், கையை நீட்டுமாறு கூறினார். இதை நம்பிய அம்சவேணி கையை நீட்டினார். அப்போது, சிவப்பு நிற திரவத்தை இரண்டு துளி தெளித்தார். இதில், அம்சவேணி நினைவு இழந்தார். அந்த நேரத்தில், வாலிபர் மேஜை டிராயரில் எவ்வளவு பணம் உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு அவர், 4,100 ரூபாய் உள்ளது என்றார். பின்னர், டிராயரை திறந்து அதிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வாலிபர் தப்பினார். சில நிமிடங்களில், அம்சவேணிக்கு நினைவு வந்தது. அப்போது, டிராயரில் ரூபாய் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். வங்கியில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள், பணத்தை திருடி சென்றவரை தேடினர். அப்போது, அந்த வாலிபர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்ததை கண்டுபிடித்து, அவரை பிடித்து தர்மஅடி கொடுத்து, வங்கியில் கொள்ளையடித்த பணத்தை மீட்டனர். பின்னர் அவரை, ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில், செய்யாறை சேர்ந்த சந்தோஷ், 25, என்பது தெரியவந்தது. அவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை