வெங்காய பரப்பு விரிவாக்கம்: விவசாயிகளுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காய பரப்பு விரிவாக்கம்: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம், வேளாண் பரப்பை அதிகரிக்கும் பணிக்காக, 34.67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது: தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2017-18ல், 612 ஹெக்டர் பரப்பளவில், பரப்பு அதிகரித்தல் உள்ளிட்டவற்றுக்கு, 64.72 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், ?,228 விவசாயிகள் பயனடைந்தனர். நடப்பு நிதி ஆண்டில், வெங்காய பரப்பு விரிவாக்கம் செய்ய, ஒரு ஹெக்டருக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. தவிர, வெங்காய சேமிப்பு கூடத்துக்கு, ஒரு டன்னுக்கு, 3,500 ரூபாய், பாரம்பரிய பழ வகை இனத்துக்கு, 30 ஆயிரம் ரூபாய், பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்ய, கல் தூண் அல்லது சிமென்ட் தூண் மூலம் பந்தல் அமைத்து, கொடி வகை காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியமாக, ?ஹக்டருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டங்களுக்காக, மாவட்டத்துக்கு, 34.67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள், இத்திட்டங்களில் பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை