ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஈரோடு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், மாவட்ட செயலாளர் முத்துராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்க கல்வித்துறையை, பள்ளி கல்வித்துறையுடன் இணைத்ததை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விபரத்தை தலைமை ஆசிரியர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், என வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் தங்கராஜ், தலைவர் மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை