அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உரக்குழியால் சுகாதாரகேடு: கோபி, பாரியூர் பஞ்., இந்திரா நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கடந்த, 2016ல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில், உரக்குழி அமைக்கப்பட்டது. இதை பஞ்., நிர்வாகம் முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. உரக்குழி இருந்தும், வீணாகி வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால், கொசு உற்பத்தியாகி மக்களை அவதிப்படவைக்கிறது. உரக்குழியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
திறக்காத கழிப்பிடம்; திண்டாடும் சுகாதாரம்: பவானிசாகர் யூனியன், பனையம்பள்ளி பஞ்., மல்லியம்பட்டி சாலையில், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான கழிப்பிடம் உள்ளது. என்ன காரணமோ? கடந்த ஓரண்டாக, பூட்டி வைத்துள்ளனர். பெண்கள் கடும் மற்றும் குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திறந்தவெளிக்கு செல்வதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. பஞ்.,நிர்வாகம் கழிப்பிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தால், சுகாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.

இருளான பாலம்; அச்சத்தில் மக்கள்: ஆப்பக்கூடலில் இருந்து, கவுந்தப்பாடி செல்லும் சாலையில், பெருந்தலையூர் பாலம் உள்ளது. இதன் வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இருளாட்சி நீடிக்கும் பாலத்தால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பாலம் ஆப்பக்கூடல் டவுன் பஞ்., பகுதியில் பாதியாக, பெருந்தலையூர் பஞ்., பகுதியில் பாதியாக இருப்பதால், நீடிக்கும் குழப்பமோ? என்னவோ? இருட்டுக்கு விமோசனம் கிடைக்கவில்லை.

செப்டிக் டேங்க் பராமரிப்பு தேவை: கோபி அருகே, பாரியூர் பஞ்., இந்திரா நகரில், 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, ஊரின் ஒதுக்குப்புறமாக, பல ஆண்டுகளுக்கு முன், மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதன், செப்டிக் டேங்க் நிரம்பியதால், அருகில் கழிவுநீர் தேங்கி, சுகாதாரக்கேடு நிலவுகிறது. மர்ம நோய் அச்சத்தால், மக்கள் பயன்படுத்துவதில்லை. செப்டிக் டேங்க்கை முறையாக பராமரிக்க, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X