மனை பிரிவு, மனைகள் முறைப்படுத்த சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனை பிரிவு, மனைகள் முறைப்படுத்த சிறப்பு முகாம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானி: மனைபிரிவு, மனைகள் வரன்முறைபடுத்தும் சிறப்பு முகாம், பவானி யில் துவங்கியது. பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில், நேற்று காலை தொடங்கிய இந்த முகாம், வரும், நவ., 3 வரை நடக்கவுள்ளது.இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல் கூறியதாவது: அனுமதியற்ற மனைப்பிரிவு, தனிப்பட்ட மனைகளை முறைப்படுத்தி கொள்ள, அரசு வாய்ப்பளித்துள்ளது. பவானி நகர மக்கள், இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 20.10.2016க்கு முன், பத்திரப்பதிவு செய்த, அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் அனுமதியற்ற மனைபிரிவுகளில் உள்ள, தனிப்பட்ட மனைகள், மனை உட்பிரிவு ஆகியவற்றில் உள்ள தங்கள் இடங்களுக்கு, 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, நகர் ஊரமைப்பு துறைக்கு, விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்துடன், நகராட்சியை அணுகி, நகராட்சி வாயிலாக நகர் ஊரமைப்பு துறையில், உரிய கட்டணம் செலுத்தி, இடங்களை வரன்முறை படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை