இசைப்பள்ளியில் கலைப்போட்டி: 150 மாணவ, மாணவியர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இசைப்பள்ளியில் கலைப்போட்டி: 150 மாணவ, மாணவியர் பங்கேற்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: அரசு இசைப்பள்ளியில் நடந்த கலைப் போட்டியில், ஆர்வத்துடன், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழ்நாடு என பெயர் சூட்டி, 50 ஆண்டுகளானதை ஒட்டி, பொன் விழா ஆண்டாக, தமிழக அரசு கொண்டாடி வருகிறது. கலை பண்பாட்டுத்துறை சார்பில், தமிழ் மொழி, தமிழர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் தமிழிசை போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள, மாவட்ட அரசு இசைப்பள்ளியில், தமிழிசை பாட்டு போட்டி, பரத நாட்டியத்தில், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், மற்றும் நாட்டுப்புற கலை நடனம் ஆகிய, பிரிவுகளில் போட்டி நடந்தது. அதில், பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த, 150 மாணவ, மாணவியர் பேர் கலந்து கொண்டு, திறமையை வெளிப்படுத்தினர். இதில் முதல் மூன்று இடங்களில், வெற்றி பெற்றவர்களுக்கு முறையே, 5,000 ரூபாய், 3,000 ரூபாய், 2,000 ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்கள், சென்னையில் நடக்கும் மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என, மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை