அனுமதியற்ற மனை பிரிவு சான்றுக்கு லஞ்சம்: நகராட்சி அதிகாரிகள் மீது புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியற்ற மனை பிரிவு சான்றுக்கு லஞ்சம்: நகராட்சி அதிகாரிகள் மீது புகார்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புன்செய்புளியம்பட்டி: அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்தும் திட்டத்தில், அப்ரூவல் சான்று தர, நகராட்சி அதிகாரிகள், லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
புன்செய்புளியம்பட்டி நகராட்சியில், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த, நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்கள், நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். அரசு நிர்ணயித்த கட்டணங்களை, செலுத்தியும், அப்ரூவல் சான்று தர, ஒரு மனைக்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக, நகராட்சி அதிகாரிகள் மீது, புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மனை பிரிவு உரிமையாளர்கள் ஒருசிலர் கூறியதாவது: அங்கீகரிக்கப்படாத மனை வரன்முறைக்கு, நகராட்சி அலுவலகத்தில், முறையாக விண்ணப்பம் பெறவில்லை; சிறப்பு முகாமும் நடத்தவில்லை. இதனால், சேலத்தில் உள்ள நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தினோம். அதன்பின், நகர ஊரமைப்பு அலுவலக உத்தரவு, பணம் செலுத்திய செலானை இணைத்து, நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தோம். ஆனால், இரண்டு மாதங்களாகியும், சான்று வழங்கவில்லை. கமிஷனர் தட்சிணாமூர்த்தி, நகரமைப்பு ஆய்வாளர் பெரியசாமி, ஒவ்வொரு மனைக்கும், அனுமதி சான்று தர, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். அரசு நிர்ணயித்த கட்டணங்களை, செலுத்தியும், அப்ரூவல் சான்று கிடைக்காமல் அவதிப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். கமிஷனர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், 'அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்த, அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் பெறப்படுகிறது. கூடுதலாக பணம் கேட்கவில்லை. இது தவறான குற்றச்சாட்டு' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை