பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ரயில்வேதுறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில், நடப்பாண்டு, பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாதந்தோறும், ரயில் பயணத்தில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிலையில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு ஊர்வலம், ஈரோட்டில் நேற்று நடந்தது. ரயில்வே பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை, ரயில்வே ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சங்கீதா, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மீனா தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்ற மாணவியர், பெண்கள் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை