திறப்பு விழாவுக்கு போலீஸ் ஸ்டேஷன் தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறப்பு விழாவுக்கு போலீஸ் ஸ்டேஷன் தயார்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: நம்பியூர் போலீஸ் ஸ்டேஷன் கட்டமைப்பு பணி முடிந்து, திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே, கோபி சாலையில், 1926 ஜூன் 3 முதல், நம்பியூர் போலீஸ் ஸ்டேசன் இயங்கியது. கட்டமைப்பு முடித்து, 75 ஆண்டுகளானதால், புதிய கட்டடம் கட்ட முடிவானது. கடந்த, 2012 ஆக.,7ல், 35 லட்சம் ரூபாய் செலவில், கட்டமைப்பு பணி துவங்கியது. ஆறு ஆண்டுகளாக, ஆமை வேகத்தில் நடந்த பணி, சமீபத்தில் நிறைவு பெற்றது. டைல்ஸ் கற்கள் பதித்து, சோலார் சூரிய ஒளியில் இயங்கும் வகையில், பேன்கள் மற்றும் சி.எப்.எல்., பல்புகள் பொருத்தப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்து, நம்பியூர் ஸ்டேஷன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஸ்டேஷன் கட்டமைப்பு முடிந்து, கடந்த ஜூன் மாதம் ஒப்படைத்தனர். வீடியோ கான்பரன்ஸ் மூலம், முதல்வரால் திறப்பு விழா காண வாய்ப்புள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை