மனைவி, மாமியாரை தாக்கிய கணவன் மீது வழக்குப்பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, மாமியாரை தாக்கிய கணவன் மீது வழக்குப்பதிவு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: மனைவி, மாமியாரை தாக்கிய, கணவர் உள்பட இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபி, தாசப்பகவுண்டன்புதூர் அருகே, நேரு வீதியை சேர்ந்தவர் பிரபு. இவர் மனைவி சுகன்யா, 25; வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, பிரபு துன்புறுத்துவதாக கூறி, ஒரு மாதமாக பெற்றோர் வீட்டில், சுகன்யா வசித்து வருகிறார். பிரபு, அவர் தந்தை பழனிசாமி ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, சுகன்யா வீட்டுக்கு சென்றனர். பணம் வாங்கி வரச் சொன்னால், இங்கேயே இருந்து கொள்வதா? எனக்கூறி, சுகன்யா கையை, சூரிக்கத்தியால் பிரபு கீறியுள்ளார். இதை தடுக்க வந்த, சுகன்யாவின் தாயார் சரோஜாவை, விறகு கட்டையால் தாக்கியுள்ளனர். பழனிசாமி, சுகன்யாவை உதைத்துள்ளார். சுகன்யா புகாரின்படி, கணவன், மாமனார் மீது, பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X