துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்கள் நடமாட தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்கள் நடமாட தடை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: மணப்பாறை அருகே, வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடக்கவுள்ளதால், பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கலெக்டர் ராசாமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி, மணப்பாறை அருகேயுள்ள அனியாப்பூர் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், வரும், 16 முதல், 22 வரை, சிறப்பு ராணுவப்படையினரால், துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. ஆகையால், மேலே கூறப்பட்டுள்ள இடத்தில், குறிப்பிட்ட நாட்களில் மனித நடமாட்டமோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதோ இருக்கக்கூடாது, வேறு யாரும் பிரவேசிக்கவும் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை