முதலிடம் பெற முயற்சி செய்யுங்கள்: சுகாதார இணை ஆலோசகர் யோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதலிடம் பெற முயற்சி செய்யுங்கள்: சுகாதார இணை ஆலோசகர் யோசனை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருச்சி: ''அனைத்து பிரிவுகளிலும், பணிகளை முறைப்படி செயல்படுத்தி முதலிடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள்,'' என, மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சக பொது சுகாதார இணை ஆலோசகர் ரவீந்தர் பேசினார்.
திருச்சி மாநகராட்சி சார்பில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் அப்புறப்படுத்துதல் தொடர்பான பயிற்சி கருத்தரங்கு நடந்தது. தூய்மை இந்தியா திட்டத்தில், தூய்மையான நகரங்களின் தர வரிசை பட்டியலில் இடம் பெறும் நகரங்கள், மத்தியக்குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, மதிப்பெண் வழங்கி, வரிசைப்படுத்தப்படுகின்றன. தரவரிசை பட்டியலில், முதலில், மூன்றாவது இடத்திலும், கடந்த ஆண்டு, ஆறாம் இடத்திலும் இருந்த திருச்சி மாநகராட்சி, தற்போது, 13வது இடத்துக்கு சென்றுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும், 17 மண்டலங்களில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் அப்புறப்படுத்துதல் தொடர்பான பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில், சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் பயிற்சிக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று, திருச்சி மாநகராட்சி சார்பில், கோவை, திருப்பூர், திருச்சி, தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திருச்சி மண்டலத்துக்குட்பட்ட நகராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கான திடக்கழிவு மேலாண்மை மற்றும் அப்புறப்படுத்துதல் தொடர்பான பயிற்சி கருத்தரங்கு நடந்தது.

மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்ற, மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகத்தின் பொது சுகாதார இணை ஆலோசகர் ரவீந்தர் பேசியதாவது: தூய்மை நகரங்களை தேர்வு செய்ய, கள ஆய்வு, மக்களிடம் கருத்து கேட்பு மற்றும் ஆவணங்கள் தயாரித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தூய்மைப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ள திருச்சி மாநகராட்சி, கள ஆய்வு, கருத்துக் கேட்பு போன்றவற்றில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளது. ஆவணங்கள் தயாரிப்பில், மதிப்பெண்கள் குறைந்துள்ளதால் தான், 13வது இடத்துக்கு சென்றுள்ளது. மத்தியக்குழு மதிப்பீடுக்கு தேவையான பணிகளை முறைப்படி செயல்படுத்தி, முதலிடத்தை பெற முயற்சி செய்ய வேண்டும். மற்ற நகரங்களும் மத்தியக்குழு எதிர்பார்க்கும் பணிகளை செய்து, தர வரிசைப்பட்டியலில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X