இந்திய கபடி அணிக்கு தேர்வான முதல் தமிழக வீரர் இறந்தார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய கபடி அணிக்கு தேர்வான முதல் தமிழக வீரர் இறந்தார்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: தமிழகத்திலிருந்து முதன்முறையாக இந்திய கபடி அணிக்கு விளையாடியவர் உடல்நலக் குறைவால் இறந்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகேயுள்ள வெண்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 64. இவர் சிறு வயது முதலே கபடி விளையாட்டில் தீவிரமாக இருந்து, தமிழக அணிக்காக விளையாடினார். பின், 1974ல், பங்களாதேஷ் நாட்டுக்கு விளையாடச் சென்ற இந்திய அணியில் விஸ்வநாதன் இடம் பிடித்து விளையாடினார். தமிழகத்திலிருந்து இந்திய கபடி அணிக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டது விஸ்வநாதன் என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள கபடி வீரர்கள் மத்தியில் இவர் பிரபலமானார். தனது இளம்வயதில் கபடி விளையாட்டுக்காக, பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., மற்றும் ரயில்வேயில் பணி கிடைத்து, பணியாற்றி வந்தார். இயற்கையில் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்ததால், விவசாயத்தின் மீது ஈர்ப்பால் வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்துக்காக தனது கிராமத்துக்கே வந்து தங்கி விட்டார். இவரது இரு மகன்களும் கபடி வீரர்கள். அவர்களும் கபடி விளையாட்டு பிரிவில், போஸ்டல் மற்றும் டி.என்.பி.எல்., நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். சில காலமாக உடல் நலக்குறைவால் இருந்து வந்த விஸ்வநாதன் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இது மாநிலம் முழுவதும் உள்ள கபடி வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை