தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், திருச்சிராப்பள்ளி மாவட்டக் கிளை சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சேவியர் பால்ராஜ் தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பயோ மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொடக்க கல்வித்துறையை, ஏற்கனவே இருந்த முறைப்படி மாற்றம் செய்ய வேண்டும். தினமும் சத்துணவு குறுஞ்செய்தியை, தலைமை ஆசிரியர் அனுப்பும் நடைமுறையை நீக்க வேண்டும், என்பன உட்பட பல கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டது. மாநில துணைத் தலைவர் நீலகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை