திருச்சி 2019 ஜனவரிக்குள் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக வேண்டும்: கலெக்டர் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி 2019 ஜனவரிக்குள் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக வேண்டும்: கலெக்டர் அறிவுரை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருச்சி: ''திருச்சி, வரும், 2019, ஜனவரிக்குள், பிளாஸ்டிக் அறவே இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்,'' என, கலெக்டர் ராசாமணி தெரிவித்தார்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. அதில், அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், திருச்சி கலெக்டர் ராசாமணி பேசியதாவது: தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என, சட்டசபையில் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலகங்களிலும், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. அனைத்துத்துறை அலுவலர்களும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய இடங்கள் ஆகியவற்றில், பிளாஸ்டிக் தீமைகள் குறித்த பேனர்கள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். தமிழக அரசின் அறிவிப்புப்படி, திருச்சி மாவட்டத்தை வரும் 2019ம் ஆண்டு ஜனவரிக்குள், பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், திருச்சி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் அலுவலர் லட்சுமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X