அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

காட்சி பொருளான சேவை மையம்: மொரப்பூர் அடுத்த, கோபிசெட்டிபாளையம் பஞ்.,ல், 13.12 லட்சம் ரூபாய் மதிப்பில், கிராம சேவை மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இம்மையம் மூலம் பட்டா, சிட்டா, ஜாதிச்சான்று, அ.பதிவேடு உள்ளிட்ட, சான்றுகளை பொதுமக்களும், விவசாயிகளும் எளிதாக பெறலாம். இந்நிலையில், கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே, கிராம சேவை மையக் கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொட்டி இருக்கு; தண்ணீர் இல்ல: நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேசிய நெடுஞ்சாலைகளில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் நலன் கருதி, தாதநாயக்கன்பட்டி நிழற்கூடம் அருகே, குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. முதலில் இந்த தொட்டிகள், பிளாஸ்டிக்கால் ஆன சின்டெக்ஸ் தொட்டிகளால் அமைக்கப்பட்டது. இவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தியும், திருடியும் வந்த நிலையில், இங்கு சிமென்ட் காரைகளால் ஆன தொட்டி கட்டப்பட்டது. ஆனால், தொட்டியில் குடிநீர் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது.

சேவை மையம் திறக்கப்படுமா: மாதேமங்கலம் பஞ்., க்கு உட்பட்ட குட்டூரில், கிராம சேவை மையம் கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன், 13.20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இம்மையத்தில், பொதுமக்களுக்கு பட்டா, சிட்டா வழங்குதல், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், வருமான சான்றிதழ் போன்றவைகளை எளிதில் பெறும் வகையில் கட்டப்பட்டது. ஆனால், திறக்கப்படாமல் உள்ளதால், சான்றிழ் பெற நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை