சம்பளத்தை உயர்த்தி வழங்க கூலி பணியாளர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சம்பளத்தை உயர்த்தி வழங்க கூலி பணியாளர்கள் வலியுறுத்தல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரூர்: அரூர் உபகோட்டம், நீர்வள ஆதார அமைப்பில் பணிபுரியும், தினக்கூலி பணியாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: அரூர் உபகோட்டம் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில், வள்ளிமதுரை வரட்டாறு அணைக்கட்டு, வாணியாறு அணை, கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு ஆகிய அணைகள் உள்ளன. உதவி செயற்பொறியாளர் கட்டுப்பாட்டில், 15 ஆண்டுகளுக்கு மேலாக, 10க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதிகாலை, 5:00 மணிக்கு அணைக்கு வரும் பணியாளர்கள் அணையை பராமரித்தல், செடி, கொடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்கின்றனர். மழை காலங்களில் அணை நிரம்பும் போது, 24 மணி நேரமும் அங்கேயே தங்கி, தொடர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு ஆரம்ப காலங்களில் மாதத்திற்கு, 1,700 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த சம்பளமும், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதனால், தினக்கூலி பணியாளர்கள் குடும்பம் நடத்த முடியாமல், அவதிப்படுகின்றனர். தினக்கூலி பணியாளர்களுக்கு, ஒப்பந்ததாரர்கள் பெயரில் அதிகாரிகளே சம்பளம் வழங்கி வருகின்றனர். ஒரு தினக்கூலி பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு, 320 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறி, 100 ரூபாய் மட்டும் வழங்குகின்றனர். எனவே, சம்பளத்தை உயர்த்தி வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X