'மாவட்டத்தில் இ - சேவை மையம் மூலம் பயனடைந்த 3.50 லட்சம் பேர்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மாவட்டத்தில் இ - சேவை மையம் மூலம் பயனடைந்த 3.50 லட்சம் பேர்'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின் கீழ் இயங்கும், அரசு பொது இ- சேவை மூலம் இதுவரை, மூன்று லட்சத்து, 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின் மூலம் தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்திலும் மற்றும் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாத்திலும், அரசு பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் வருவாய் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த பல்வேறு சேவைகளை இணைய வழி சேவை மூலமாக வழங்கி வருகின்றன. மேலும், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட, 20 வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. சமூக நலத்துறை மூலம் பெறப்படும் திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல், வண்ண பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின் கட்டணம் செலுத்தும் வசதி, இணையதளம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர பதிவு செய்தல் ஆகிய சேவைகள் செய்து வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2015 முதல், 2018 ஜூன் வரை, மூன்று லட்சத்து, 50 ஆயிரம் பேர் இ-சேவை மையம் மூலம் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X