9 நாள் போராட்டம் வாபஸ்: பணிக்கு திரும்பிய பணியாளர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

9 நாள் போராட்டம் வாபஸ்: பணிக்கு திரும்பிய பணியாளர்கள்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: ஊரக வளர்ச்சித்துறையினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்பது நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் நேற்று பணிக்கு திரும்பினர். கிராம பஞ்., செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையினர் கடந்த, 3ல் இருந்து, ஒன்பது நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், மாநில நிர்வாகிகள், நேற்று முன்தினம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், 10 நாட்களுக்குள் கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்ததையடுத்து, தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று எட்டு யூனியன் அலுவலகங்கள், ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்து, தணிக்கை, சத்துணவு போன்ற உதவி இயக்குனர் அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். 503 பணியாளர்களில், 60 சதவீதத்தினர் பணிக்கு திரும்பினர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், 40 சதவீதம் பேர் விடுப்பில் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை