'இன்ஸ்பயர் மானக்' விருதுக்கு தனியார் பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இன்ஸ்பயர் மானக்' விருதுக்கு தனியார் பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தர்மபுரி: 'இன்ஸ்பயர் மானக்' விருதுக்கு, நடப்பாண்டு முதல், தனியார் பள்ளி மாணவர்களும் வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மாணவர்களின், அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறை சார்பில், இன்ஸ்பயர் விருதுகளை வழங்குகிறது. இந்தாண்டு, இவ்விருது 'இன்ஸ்பயர் மானக்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், நடப்பாண்டு முதல் தனியார் பள்ளி மாணவர்களும், இவ்விருது பெற பங்கேற்கலாம்' என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசு, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறு முதல், 10 வரை பயிலும் மாணவ, மாணவியர் (www. inspireawards- dst.gov.in) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாணவர் தாங்கள் பயிலும் பள்ளி வாயிலாக, தங்கள் படைப்புகளுடன், அதை பற்றிய, 200 வார்த்தைகள் குறிப்புகள் எழுதிட வேண்டும். ஒரு வகுப்பிற்கு ஒருவர் என, ஜூலை, 31க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அறிவியல் படைப்புகளை ஏற்படுத்த, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் உருவாக்கும், அறிவியல் படைப்புகளின் கண்காட்சி ஆண்டு இறுதியில் நடத்தப்படும். அதில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்கு பரிந்துரைக்கப்படும். அதன்படி, தேசிய அளவில், 1,000 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. அதிலிருந்து, 60 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, ஜனாதிபதி தலைமையில் விருதுகள் வழங்கப்பட்டு, பாராட்டுகள் தெரிவிக்கப்பட உள்ளது' என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை