கழிவறைக்கு பூட்டு: கிராம மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கழிவறைக்கு பூட்டு: கிராம மக்கள் அவதி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, எர்ரப்பட்டி சுகாதார வளாகத்திற்கு பூட்டு போடப்பட்டதால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. நல்லம்பள்ளி யூனியன், எ.ஜெட்டிஹள்ளி பஞ்.,க்குட்பட்டது எர்ரப்பட்டி. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள பெண்கள், திறந்த வெளியில் இயற்கை உபாதை கழித்து வந்ததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. 2011-2012ல் வளாகம் புதுப்பிக்கப்பட்டு, ஒரு சில மாதங்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்தது. தற்போது சுகாதார வளாகத்துக்கு பஞ்., நிர்வாகம் பூட்டு போட்டதால், இப்பகுதி பெண்கள், திறந்த வெளியில் இயற்கை உபாதை கழித்து வருகின்றனர். ஆகவே, சுகாதார வளாகத்தை திறந்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை