மந்த கதியில் சாலை விரிவாக்க பணி; விரைவாக முடிக்க வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மந்த கதியில் சாலை விரிவாக்க பணி; விரைவாக முடிக்க வேண்டுகோள்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: மந்தகதியில் நடக்கும், புதிய திருப்பத்தூர் சாலை பணியை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலைத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி, மதிகோண்பாளையம் வழியாக, புதிய திருப்பத்தூர் சாலை செல்கிறது. இப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்ததையடுத்து, கூட்டு ரோடு மற்றும் அதை ஒட்டியுள்ள அரூர், திருப்பத்தூர், புதிய திருப்பத்தூர் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணி கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் துவங்கியது. இதில், ரவுண்டானா அமைக்கும் பணி சமீபத்தில் முடிந்தது. ஆனால், புதிய திருப்பத்தூர் சாலை அமைக்கும் பணி, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் மட்டும் உள்ளது. இதனால், இவ்வழியாக வந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதுடன், இப்பகுதி மக்களும் அவஸ்தைப்படுகின்றனர். மேலும், இச்சாலையில் எதிரே வாகனங்கள் வரும் போது, சாலையோரம் வாகனத்தை இயக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, புதிய திருப்பத்தூர் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை