மாவட்டத்தில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட, இந்து முன்னணி செயற்குழு கூட்டம், ஓசூர் அடுத்த மதகொண்டப்பள்ளியில் நேற்று நடந்தது. சேலம் கோட்ட செயலாளர் உமேஷ் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் பக்தன் ஜி பேசினார். கூட்டத்தில், அனைத்து ஒன்றியங்களிலும் இந்து முன்னணியை கொண்டு செல்வது. தமிழகத்தில் கோவில் சிலைகள் மற்றும் நிலங்கள் காணாமல் போவது தொடர்கிறது. எனவே கோவில் சொத்தை கோவிலுக்கே வழங்க வேண்டும். கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 29 ல், கிருஷ்ணகிரி, ஓசூர், பாகலூர், கெலமங்கலம், மதகொண்டப்பள்ளி, சூளகிரி ஆகிய ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை