ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: ரேஷன் அரிசி கடத்தியவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் சிங்காரப்பேட்டை பகுதியில், கடந்த ஜூன், 29ல் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெள்ளக்குட்டை கிராமம் அய்யர் ஓட்டல் அருகில் ஒருவர், மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தார். போலீசார் அவரிடம் சோதனை செய்ததில், கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக, 1,050 கிலோ ரேஷன் அரிசி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பிச்சாண்டி, 43, என்பது தெரிவந்தது. இதையடுத்து, அரிசியை பறிமுதல் செய்து பிச்சாண்டியை கைது செய்து, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். நேற்று இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்தின் பரிந்துரைபடி, பிச்சாண்டியை, கலெக்டர் கதிரவன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை