இரண்டு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில், இரு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில், தொழிலாளர் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட மேலாளர் பாலசந்திரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தேன்கனிக்கோட்டை நகரில் உள்ள பேக்கரி, பானிபூரி கடைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இரு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். சிறுவர்களை பணியில் அமர்த்திய, கடை உரிமையாளர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை