'போலீசார் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'போலீசார் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போலீசார் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, எஸ்.பி., மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி ஆயுதப்படை பிரிவில், போலீசாக பணியாற்றி வருபவர் பெரியண்ணன், 28. இவர் பணி முடிந்து, நேற்று முன்தினம் மாலை, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி டாடா நகருக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒட்டப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர், பின்னோக்கி வந்தது. இதை கவனிக்காத பெரியண்ணனின் டூவீலர் மீது, டிராக்டர் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கிருஷ்ணகிரி எஸ்.பி., மகேஷ்குமார், நேற்று காலை மைக்கில் பேசும்போது, 'அனைத்து போலீசாரும் பணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் டூவீலர் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை