ஓசூர் நகராட்சி பள்ளி கெலமங்கலம் ஆசிரியருக்கு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் நகராட்சி பள்ளி கெலமங்கலம் ஆசிரியருக்கு விருது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஓசூர்: ஓசூர் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கனவு பள்ளி விருதும், கெலமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு, கனவு ஆசிரியர் விருதும் வழங்கி பள்ளிக்கல்வித்துறை கவுரவித்துள்ளது.
ஓசூர், காமராஜ் காலனியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, கணிதம், அறிவியல் ஆய்வகம், நூலகம், மாடல் வகுப்பறை, கம்ப்யூட்டர் வசதி என பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட அளவில், இப்பள்ளி சிறந்து விளங்கி வருவதால், திருவண்ணாமலையில் கடந்த, 11 ல் நடந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் செங்கோட்டையன், நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு கனவு பள்ளி விருது மற்றும் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் சந்திரபிரியா, ஜெயசுதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கெலமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில், பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் திம்மப்பா. இவர், மாணவர் சேர்க்கை, பள்ளி மேலாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதற்காக, கனவு ஆசிரியர் விருது மற்றும் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, உதவி தலைமை ஆசிரியை அமலோற்பவமேரி உட்பட பலர் பாராட்டினர்.


* தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மந்திகுளாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை சிலம்பரசி, இவர், அந்தப் பள்ளியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 20 மாணவ, மாணவியரை தேசிய அளவில் நடக்கும் இணையவழி தேர்வுகளில் பங்கேற்று, தேர்ச்சி பெற செய்துள்ளார். இதையடுத்து, அவருக்கு திருவண்ணாமலையில் நடந்த விழாவில், கனவு ஆசிரியர் விருதை, அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, வட்டார கல்வி அலுவலர்கள் ரேணுகாதேவி, பரமசிவம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X