புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வங்கி துவங்க வேண்டும்: கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழையஜெயங்கொண்டம் பகுதியில் அரசு வங்கி கிளைகள் எதுவும் இல்லை. ஒரு தனியார் வங்கி மட்டும் செயல்படுகிறது. அரசு வங்கி கணக்கு துவக்க, கிருஷ்ணராயபுரம்தான் செல்ல வேண்டும். இதனால், வங்கி கணக்கு தொடங்க தேவையிலலாமல் கூடுதல் நேரம் செலவாகிறது. மேலும், கடன் வசதியும் கிடைப்பதில்லை. இப்பகுதியில் புதிதாக அரசு வங்கி துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.பெரியசாமி, பழையஜெயங்கொண்டம்.

தொங்கும் தெருவிளக்கால் அச்சம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளத்திலிருந்து, பழையஜெயங்கொண்டம் வரை செல்லும் சாலையில், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம், தெரு விளக்குகள் போடப்பட்டுள்ளன. அதில், பிச்சம்பட்டி சாலையில் உள்ள ஒரு தெரு விளக்கு, கழன்று தொங்குகிறது. இதனால், தெருவிளக்கு எரியாமல், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், நடந்து செல்பவர்கள், காற்றில் ஆடும் விளக்கு உடைந்து விழுந்துவிடுமோ என, அஞ்சுகின்றனர்.

- எம்.வசந்த், பழையஜெயங்கொண்டம். 1

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை