குளித்தலை அருகே அம்மா திட்டம் முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளித்தலை அருகே அம்மா திட்டம் முகாம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை அருகே நடந்த அம்மா திட்ட முகாமில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், உதவிதொகை வேண்டி மனு கொடுத்தனர். குளித்தலை அடுத்த வதியம் பஞ்., அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறை சார்பில், சிறப்பு அம்மா திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தாசில்தார் முருகன், கால் நடை மருத்துவர் கவி கண்ணன், அரசு மருத்துவர் ரமேஷ் ஆகியோர், அரசு திட்டங்கள் குறித்து பேசினர். இதில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர், தங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என, மனு கொடுத்தனர். இதில் நடமாடும் மருத்துவமனை டாக்டர் ரமேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர், பொது மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, நோய் தடுப்பு ஆலோசனை வழங்கினர். மேலும் அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இந்த முகாமில், வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை