சாலை விபத்தில் இளம் வயதினர் இறக்கின்றனர்: எஸ்.பி., வருத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் இளம் வயதினர் இறக்கின்றனர்: எஸ்.பி., வருத்தம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ''சாலை விபத்துகளில், டூவீலர்களில் செல்லும் இளம் வயதினர்தான் அதிகம் இறக்கின்றனர்,'' என, கரூர் எஸ்.பி., ராஜசேகரன் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், வாகன ஓட்டுனர்களுக்கான, விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. அதில், எஸ்.பி., ராஜசேகரன் பேசியதாவது: இந்தியாவில்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் நடக்கும், ஐந்து லட்சம் விபத்துகளில், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அதில், 15 வயது முதல், 35 வயதுடைய இளம் வயதினர், டூவீலர்களில் செல்லும் போது இறக்கின்றனர். மது அருந்துதல், வாகன பராமரிப்பு இல்லாதது, தூக்கம், சாலை விதிகளை மதிக்காமல் செல்வது போன்றவைகள் தான் இதற்கு காரணம். மாவட்டம் முழுவதும், 10 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். இதனால் கடந்த, ஆறு மாதங்களில் விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. ஒரு மாதத்துக்கு சராசரியாக, 10 பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, போலீசாரால் மட்டும் முடியாது. பொதுமக்களும், உயிரின் மகத்துவம் புரிந்து, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன், டி.எஸ்.பி., கும்மராஜா உள்பட, பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை