புதிய திடக்கழிவு மேலாண்மை திட்டம்: ரூ.2 கோடி ரூபாய் செலவில் பணிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய திடக்கழிவு மேலாண்மை திட்டம்: ரூ.2 கோடி ரூபாய் செலவில் பணிகள்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கரூர்: கரூர் நகராட்சியில், சேகரிக்கப்படும் குப்பையை, திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் அழிக்க, இரண்டு கோடி ரூபாய் செலவில் துவங்கிய பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
கரூர் நகராட்சி பகுதியில், நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பை, வாங்கல் சாலை அரசு காலனியில் உள்ள கிடங்கில் கொட்டப் படுகிறது. இதுவரை, ஒரு லட்சத்து, 40 ஆயிரம் ஸ்கூப்பிக் மீட்டர் அளவிலான குப்பை கிடங்கில் உள்ளது. மேலும், நகராட்சி பகுதியில் உள்ள, 67 ஆயிரம் குடும்பங்களில் இருந்து தினமும், 89 டன் குப்பை சேகரிப்படுகிறது. 250 குடும்பங்களுக்கு ஒரு நபர் என்ற விகிதத்தில், 251 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, இரண்டு கோடி ரூபாய் செலவில் புதிய திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம், குப்பை அழிக்க, கிடங்கில் நவீன மெஷின்கள் பொறுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது: கும்பகோணம் நகராட்சியில், புதிய திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அங்கு பயிற்சி பெற, கரூர் நகராட்சியை சேர்ந்த, 30 ஊழியர்கள் விரைவில் கும்பகோணம் செல்ல உள்ளனர். புதிய திட்டத்தின்படி, மூன்று டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் மற்றும் 30 ஊழியர்கள், ஒரு எலெக்ட்ரீசியன் உள்பட, பலர் பணியில் ஈடுபட உள்ளனர். புதிய முறையில், பல ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டுள்ள குப்பை முதலில் அழிக்கப்படும். மழைக்காலங்களில், குப்பை சேகரிக்க வசதியாக பேட்டரியில் இயங்கக் கூடிய, 85 இருசக்கர வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. இதன் மூலம் குறைந்த நேரத்தில், அதிக குப்பை சேகரிக்க முடியும். இன்னும், 15 நாட்களில், புதிய திடக்கழிவு திட்டம் மேலாண்மை திட்டம் செயல்படத் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை