உடைந்த மின்கம்பம் விபத்து அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடைந்த மின்கம்பம் விபத்து அபாயம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரத்தில், மின்கம்பம் சேதமடைந்து, உடைந்து விழும் நிலையில் உள்ளதால், மக்கள் அச்சமடைகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரத்திலிருந்து, மேட்டு மகாதானபுரம் செல்லும் சாலையில், தீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள மின் கம்பம், மேல்புறத்தில் கடுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது, பலத்த காற்று வீசி வருவதால், அவ்வழியாக செல்லும் மக்கள், கம்பம் உடைந்து விழுந்துவிடுமோ என, அச்சத்துடன் செல்கின்றனர். சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை