மணல் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: காவிரி ஆற்றுப்பகுதியிலிருந்து மணல் அள்ளி கடத்திச் சென்ற, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை அருகே, வதியம் காவிரி ஆற்றிலிருந்து, மணல் கடத்தப்படுவதாக, குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, வதியம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில், ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். ஓட்டுனர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். லாரியை சோதனை செய்தபோது, அதில், மணல் கடத்திச் செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து, ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர். இதேபோல், தோகைமலை பகுதியில், சட்ட விரோதமாக அரளைகல், ஜல்லி, கிராவல் மண், செம்மண், ஆற்றுவாரி மணல் உள்ளிட்ட மண் மற்றும் கனிமங்கள் அதிகம் கடத்தப்படுவதாக, அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் புகார் செய்தனர். அதன் படி, குளித்தலை வட்டார போக்குவரத்து அலுவலர், நேற்று முன்தினம் மாலை, தோகைமலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக சென்ற டிப்பர் லாரியை, அதிகாரிகள் விரட்டிச் சென்று, குப்பாச்சிபட்டி அருகே மடக்கிப் பிடித்தனர். அதில், லாரியில், அரளைக்கல் கடத்திச் சென்றது தெரிய வந்தது. லாரி பறிமுதல் செய்யப்பட்டு, தோகைமலை போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X