அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜூலை 14, 2018
Advertisement

பாலத்தின் தடுப்பு கட்டை சேதம்: குளித்தலை அடுத்த, மாயனூர் காவிரி தடுப்பணையில் இருந்து தொடங்கும் தென்கரை பாசன வாய்க்கால், திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றில் இணைகிறது. இதில், குளித்தலையில், மலையப்பன் நகர் செல்லும் தென்கரை பாசன வாய்க்கால் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் இருந்த தடுப்பு கட்டைகள் தற்போது சேதமடைந்துவிட்டன. இதனால், மக்கள், பைக் மற்றும் சைக்கிளில், பாலத்தில் செல்லமுடியவில்லை.
ஸ்டேஷன் முன் போக்குவரத்து தடை: குளித்தலை போலீஸ் ஸ்டேஷன் முன், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மகளிர் போலீஸ், சட்ட ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு பொக்லைன் இயந்திரம் மற்றும் ஏழு லாரிகள், ஒரு மாதத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. பறிமுதல் செய்த வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்த வேண்டும்.

பாலம் பணியில் குழாய் உடைப்பு: குளித்தலை அடுத்த, வதியம் தென்கரை பாசன வாய்க்கால் பாலம் வழியாக, காவிரி ஆற்றில் இருந்து மருங்காபுரி, மணப்பாறைக்கு, குழாய் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் செல்கிறது. வாய்க்காலில் பாலம் சேதமடைந்த நிலையில், தற்போது யூனியன் பொது நிதியில் இருந்து, 32 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டும், போது குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.

இடையூறாக உள்ள வாகனங்கள்: குளித்தலை பகுதியில் விபத்து மற்றும் திருட்டு, அடிதடி, கடத்தல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. இந்த வழக்கு சம்மந்தமான வாகனங்கள் , ஆர்.டி.ஓ., அலுவலகம் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் வெயிலால், இவ்வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன. மேலும், வருவாய் துறை அலுவலக வளாகத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் இடையூறு ஏற்படுகிறது. வீணாகும் முன் அவற்றை ஏலம் விட வேண்டும்.

சாலையோரம் முட்செடிகள்: குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்., வீரவள்ளியிலிருந்து, பிள்ளபாளையம் செல்லும் நெடுஞ்சாலை, கடந்த ஆண்டு தார்ச்சாலையாக புதுப்பிக்கப்பட்டது. இந்த சாலையை கிராம மக்கள், விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து வருவதால் , பொது மக்கள் வாகனத்தில் செல்லுமுடியவில்லை. இரவு நேரத்தில் வாகனத்தில் வரும் போது பொது மக்கள் மீது முட்செடிகள் பட்டு காயம் ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X