அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை: கற்காலத்தில் வசிக்கும் தொகுப்பு வீடுவாசிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை: கற்காலத்தில் வசிக்கும் தொகுப்பு வீடுவாசிகள்

Added : ஜூலை 14, 2018
Advertisement

அரவக்குறிச்சி: பள்ளபட்டி அருகே அடிப்படை வசதிகள் எதுவுமின்றி, கிராம பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அரவக்குறிச்சி அடுத்த, பள்ளபட்டி அருகே, வேலம்பாடி பஞ்சாயத்திக்கு உட்பட்ட, மோளையாண்டிபட்டி பழைய காலனி, அரசு தொகுப்பு வீட்டு குடியிருப்பு பகுதியில், பல ஆண்டுகளாக, குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு முதலான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் திண்டாடுகின்றனர். போதுமான குடிநீர் வினியோகிக்கப்படாததால், தண்ணீர் தேடி வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. சரியான சாலை வசதி இல்லாததால், வெளியில் எங்கும் போய்வர முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீர் ஆங்காங்கே சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர். தங்கள் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


இங்குள்ள மக்களுக்காக கடந்த காலத்தில் போர்வெல் அமைத்து மின் மோட்டார் பொருத்தி, சின்டெக்ஸ் தொட்டி வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால், அந்த மின் மோட்டார் பழுதாகி பல மாதங்கள் ஆகின்றன. அதை சரி செய்து, குடிநீர் வினியோகிக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்துவிட்டோம். ஆனால், பலன் எதுவும் இல்லை.


- பெ.நல்லமுத்து, 65

பல ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில், இந்த தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. கட்டும்போதே உறுதியாக கட்டப்படாததால், அதில் தற்போது பல வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்துவிடும் என்ற நிலையில் தான் மேற்கூரைகள் உள்ளன. அந்த வீடுகளில் குடியிருக்கவே அச்சமாக உள்ளது. சேதமான வீடுகளை புதுப்பித்து தர வேண்டும்.


- மா.சுப்பம்மாள், 70

இங்கு ஒருசில தெரு விளக்குகள் மட்டும் போடப்பட்டுள்ளது. அதுவும் பழுதாகி பல நாட்களாகின்றன. இது தவிர மின் விநியோகத்திற்காக நடப்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்து, கான்கிரீட் கலவை பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின் விநியோகமும் சரிவர இல்லை. கடந்த ஒருவார காலமாக இப்பகுதியில் மின்சாரம் இல்லை. இதனால், எந்த பணியும் மேற்கொள்ள முடியாமல் கற்காலத்தில் வாழ்வது போல் வாழ்கிறோம்.


- சு.பழனி, 70

இந்த பழைய காலனியில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் முதியவர்கள். ஆனால், பல வீடுகளில் கழிப்பிட வசதி இல்லை. இங்கு பொது சுகாதார வளாக வசதி இல்லை. இதனால், மக்கள் சாலையோரங்களை, கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தெருக்களில் மண் சாலை தான் உள்ளது. இதனால், மழைக் காலங்களில், அனைத்து தெருக்களும் சேறும் சகதியுமாக உள்ளன.


- க.ஆண்டவன், 80

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை