மாடி வகுப்பறையில் கதவில்லாத ஜன்னல்; 100 ஆண்டு பள்ளியில் அவலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாடி வகுப்பறையில் கதவில்லாத ஜன்னல்; 100 ஆண்டு பள்ளியில் அவலம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், கதவு இல்லாத திறந்த நிலையில் உள்ள ஜன்னல் அருகே அமர்ந்து மாணவர்கள் படிக்கின்றனர்.
கரூர் நகராட்சி அலுவலகம் எதிரே, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதில் தற்போது, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஏற்கனவே ஆங்கிலேயர் காலத்தில், மாடியில் உள்ள வகுப்பறைகளுக்கு செல்ல கட்டப்பட்ட, மரத்திலான படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளது. பள்ளி நிர்வாகம் அதை சீரமைக்கவில்லை. இந்நிலையில், பள்ளி வளாகத்தில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, கட்டடத்தின் மாடியில், உயிரியல் ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் செயல்படுகின்றன. அதில் இருந்த ஜன்னல்களில், கதவுகள் உடைந்து நீண்ட நாட்களாகின்றன. திறந்த நிலையில் உள்ள ஜன்னல் அருகே அமர்ந்து, மாணவர்கள் படிக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X