கோழிமுட்டை பொறிப்பான் மேலாண்மை பயிற்சி பெற அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோழிமுட்டை பொறிப்பான் மேலாண்மை பயிற்சி பெற அழைப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: வேளாண் அறிவியல் மையத்தில் நடக்கும் கிராமபுற இளைஞர்களுக்கான கோழி முட்டை பொறிப்பான் மேலாண்மை பயிற்சியில் பங்கேற்று பயன்பெற, அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில், வரும், 20ல், புழுதேரி வேளாண் அறிவியல் மையத்தில், கோழி முட்டை பொறிப்பான் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. இதில், 45 வயதுக்குட்பட்ட, கிராமப்புற இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். இப் பயிற்சியில், சிறிய முட்டை பொறிப்பான் தயாரித்தல், பழுதுபார்த்தல், பராமரிப்பு மற்றும் கோழிக்குஞ்சுகள் பராமரிப்பு ஆகிய தலைப்புகளில் பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள முன் பதிவு செய்ய 9790004760, 9488967675 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, பதிவு செய்து கொள்ளலாம். என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை