அரசு தொடக்கப்பள்ளி அருகே குவிந்திருக்கும் குப்பை அகற்றப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு தொடக்கப்பள்ளி அருகே குவிந்திருக்கும் குப்பை அகற்றப்படுமா?

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: தொடக்கப்பள்ளி அருகே குவிந்துள்ள, இறைச்சி மற்றும் குப்பைக் கழிவுகளை அகற்றாததால், பள்ளி மாணவர்களுக்கு நோய்தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர், அரசு காலனியில், அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகே, அப்பகுதி மற்றும் பாலம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆடு, கோழி இறைச்சி கடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் உட்பட, ஏராளமான குப்பை கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இப்பகுதியில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தும், அவற்றை பயன்படுத்துவதில்லை. இதனால், அருகிலுள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள், துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படுகின்றனர். குப்பையை அள்ள வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் பலன் இல்லை. மாணவர்கள் தொற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகும் முன், பள்ளி அருகே குவிந்துள்ள குப்பையை அள்ளி அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X