அண்ணாதுரையின் படிப்பாற்றல்தான் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு காரணம்: தம்பிதுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரையின் படிப்பாற்றல்தான் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு காரணம்: தம்பிதுரை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கரூர்: ''முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் படிப்பாற்றலால்தான், 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி நீடிக்கிறது,'' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
கரூரில், புத்தக கண்காட்சியை திறந்து வைத்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், ''சங்க காலத்தில் ஜாதி, மதம் கிடையாது. சமஸ்கிருத கலாச்சாரம் வந்த போது, ஜாதி, மதம் உருவானது. சேர, சோழ, பாண்டியன் ஆட்சி காலத்தில் தமிழ் வளர்ந்தது. சைவம் தமிழை வளர்த்தது. பிரதமர் நரேந்திர மோடி, புதிய கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த போது, ராஜராஜ சோழன் பெயரை வைத்தார். இத்ததைய வரலாறுகளை புத்தகங்கள் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். கலாச்சாரம், இனப்பற்று வளர தாய் மொழிப் பற்று அவசியம். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கணக்கில்லாத புத்தகங்களை படித்தவர். அவரது படிப்பாற்றல்தான், தமிழகத்தில், 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி நீடிக்கிறது. நம்மை செதுக்கிக் கொள்ள புத்தகங்களை படிக்க வேண்டும்,'' என்றார்.

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், '' புத்தகங்கள்தான் பல அறிஞர் களை உருவாக்கியுள்ளது. ஆனால், இன்றைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதில், 10 சதவீதம் கூட உண்மை இருப்பதில்லை. பெண்கள் டி.வி., சீரியல்களில் மூழ்கி உள்ளனர். புத்தகங்கள் வாசிப்பது குறைந்து வருகிறது. புதிய கட்சி துவங்கியுள்ள கமலஹாசன் பங்கு பெறும் டி.வி., நிகழ்ச்சியை அதிகம் பேர் பார்ப்பதாக கூறுகின்றனர். இதுபோன்ற சில டி.வி., நிகழ்ச்சிகள் மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, சாகும் தருவாயில் கூட, புத்தகங்களைப் படித்தார். சிறந்த அறிஞராக திகழ்ந்தார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை