புதரில் சிசுவை வீசியது யார்? பட்டியல் வைத்து ஆய்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதரில் சிசுவை வீசியது யார்? பட்டியல் வைத்து ஆய்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: காடச்சநல்லூரில், முட்புதரில் பெண் சிசுவை வீசியது யார் என, பட்டியல் வைத்து விசாரணை செய்யப்படுகிறது.
பள்ளிபாளையம் ஒன்றியம், காடச்சநல்லூர் அடுத்த, அன்னை சத்யா நகரில், பிறந்து ஒரு நாளான பெண் சிசுவை, தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர். போலீசாரும், வருவாய்த்துறையினரும் சிசுவை மீட்டனர். காடச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட சிசு, மேல் சிகிச்சைக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிசுவை வீசியது யார் என, தெரியவில்லை.

இதுகுறித்து, வருவாய் ஆய்வாளர் மதன் கூறியதாவது: பள்ளிபாளையம் வட்டாரம் மற்றும் சுற்றுப்பகுதியில், இந்த மாதத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவம் ஆனவர்களை பட்டியல் வைத்து விசாரிக்கச் சொல்லி, சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்தோம். விசாரணையில் அப்படி யாரும் இல்லை. வேறு பகுதியில் பிரசவம் பார்த்து, இங்கு வந்து வீசியிருக்கலாம். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை