கோழிகள் விற்பனை அமோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோழிகள் விற்பனை அமோகம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மல்லசமுத்திரம்: மோர்பாளையம் சந்தையில், கோழிகள் விற்பனை அமோகமாக நடந்தது. திருச்செங்கோடு அடுத்த, மோர்பாளையத்தில் வியாழக்கிழமையன்று மாட்டுசந்தை, வெள்ளிக்கிழமையன்று ஆடு, கோழி சந்தை நடப்பது வழக்கம். நேற்று, நாட்டுகோழி ஒரு கிலோ, 400 ரூபாய்; கட்டுச்சேவல், 1,000 ரூபாய்; போந்தாகோழி, 150 ரூபாய்; கலப்பின கோழிகள் 200 ரூபாய்க்கு விற்பனையானது. இதில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டனர். ஆடி மாதம் துவங்க உள்ளதை முன்னிட்டு, கோழிகளின் நுகர்வு அதிகளவில் தேவைப்படுவதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை