திடக்கழிவு மேலாண்மை ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திடக்கழிவு மேலாண்மை ஆலோசனை கூட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆணையாளர் மகேஸ்வரி தலைமை வகித்து, பேசியதாவது: நகராட்சி ஆணையத்தின் உத்தரவுப்படி, 5,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஓட்டல், பேக்கரி, காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட வியாபார நிறுவனத்தார், அவர்களது நிறுவனத்திலிருந்து வெளியேறும் மக்கும் குப்பைகளை அவர்களே, அதற்குரிய கருவியை, நகராட்சி நிர்வாகத்திடம் பணம் கொடுத்து வாங்கி, உரமாக மாற்றிக்கொள்ள வேண்டும். மக்காத குப்பையை நகராட்சி நிர்வாகம் பெற்றுக்கொள்ளும். இவ்வாறு, அவர் பேசினார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை அலுவலர் பழனிவேல்ராஜா கூறுகையில், ''கழிவுகள் என்றால் சக்தி. இதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. உரமாக மாற்றி, மற்றொரு சக்தியாக மாறுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் செயல்முறை விளக்கப்படி செயல் பட்டால், அனைத்தும் நன்மையாக நடக்கும்,'' என்றார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை அலுவலர் ராஜசேகர், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, தலைமைப் பொறியாளர் குணசேகரன், ஓட்டல், பேக்கரி, மளிகை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், திருமண மண்டப நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனத்தார் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை