இலவச வீட்டுமனை கோரி கலெக்டரிடம் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச வீட்டுமனை கோரி கலெக்டரிடம் மனு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள், இலவச வீட்டுமனை வழங்கக் கோரி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதன் விபரம்: பள்ளிபாளையம் அடுத்த விலாங்காட்டூர், மாரியம்மன் கோவில் வீதியில், 120 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஏழை, எளிய மக்களாகிய நாங்கள் அனைவரும், வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை கோரி, இரண்டு ஆண்டுகளாக கலெக்டர், முதலமைச்சர், வருவாய்த்துறை அலுவலர்களிடம் மனு கொடுத்துள்ளோம். அதில், காடச்சநல்லூர் கிராமத்தில், தமிழக அரசுக்கு பாத்தியப்பட்ட அரசு புறம்போக்கு நிலம், நான்கு ஏக்கர் உள்ளது. மேற்கண்ட நிலத்திலோ அல்லது வேறு இடத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்திலோ எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை