அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஜூலை 14, 2018
Advertisement

சாலை பள்ளம்; விபத்து அபாயம்: நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து சின்னக்கடைவீதி, வாணியர் தெரு வழியாக கடைவீதி செல்லும் வகையில் சாலை அமைந்துள்ளது. அங்குள்ள பிள்ளையார் கோவில் முன், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பணிக்காக தோண்டப்பட்ட குழி, சரியான முறையில் மூடாததால், மக்கள் தடுமாறி விழுகின்றனர். வான ஓட்டிகள் அவ்வழியாக செல்லமுடியாத அளவிற்கு பள்ளம் உள்ளது. அதை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
திறந்தவெளி கால்வாயால் அவதி: எலச்சிபாளையம் ஒன்றியம், குமரமங்கலத்தில் இருந்து, சக்திநாயக்கன்பாளையம் செல்லும் சாலையோரத்தில், நீண்டநாட்களாக திறந்தவெளியில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இது கொசுக்களின் வசிப்பிடமாக மாறியுள்ளதால், அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிப்போர், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, 'அந்த கால்வாய்க்கு, சிலாப் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் திரியும் குதிரைகள்: குமாரபாளையம், சேலம் சாலை, இடைப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் குதிரைகள் சுற்றித் திரிகின்றன. அதிக வாகன போக்குவரத்துள்ள இந்த சாலைகளில், குதிரைகள் திரிவதால், வாகன விபத்து ஏற்படும். அவற்றால் கடிபட்டு, பலரும் பாதிக்கப்படுகின்றனர். உரிமையாளர்கள் இதுகுறித்து, கண்டு கொள்வதில்லை. தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், கண்டும் காணாத நிலையில் உள்ளது. நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் பலனில்லை.

சாலையில் ஓடும் சாக்கடை கழிவுநீர்: குமாரபாளையம், இடைப்பாடி சாலை, தனியார் பிராசசிங் மில் அடுத்த, கார் பார்க்கிங் முன் சாக்கடை நிரம்பி, போக வழியின்றி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் நடமாட்டம் கொண்ட இப்பகுதியில், நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் துர்நாற்றம், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் செல்லும்போது, நடந்து செல்வோர் மீது கழிவுநீர் தெறிக்கிறது. கழிவுநீர் எளிதில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் ஸ்டேஷன் அருகே பள்ளம்: குமாரபாளையம், போலீஸ் ஸ்டேஷன் அருகே, இடைப்பாடி சாலை நுழைவுப்பகுதியில், பெரிய பள்ளம் உள்ளது. தெருவிளக்கு வெளிச்சம் கூட இல்லாத இந்த இடத்தில், வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் பள்ளத்தை கவனிக்காமல் கீழே விழ நேரிடுகிறது. சேலம் சாலையில் இருந்து, பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், இந்த பள்ளத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சரி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை